ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி - இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி - இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Published on
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் பெரியாழ்வார் மற்றும் பெரியபெருமாள் நவனீத கிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் சப்பரமானது 4 ரதவீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. அப்போது இளைஞர்கள் உறியடித்து அசத்தியதுடன், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த வழுக்கு மரத்தில் ஏறி சாகசம் புரிந்தனர். இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com