

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கார்த்திகை மாதம் முடிந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு பின்பே மார்கழி மாத பூஜைகள் ஆரம்பிப்பது வழக்கம் ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் சூரிய பகவான் எந்த நேரத்தில் தனுர் ராசிக்கு பிரவேசிக்கிறாரோ அந்த நேரத்திலேயே மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஆண்டாளுக்கு தங்கத்தினால் திருப்பாவை நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டது.