திருமண மண்டப தீ விபத்து வழக்கு - மண்டப உரிமையாளர் ரூ.40 லட்சம் செலுத்த உத்தரவு

2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்து தொடர்பான மேல் முறையீட்டில், மண்டப உரிமையாளர் 40 லட்ச ரூபாய் தொகையை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
திருமண மண்டப தீ விபத்து வழக்கு - மண்டப உரிமையாளர் ரூ.40 லட்சம் செலுத்த உத்தரவு
Published on
திருச்சி ஸ்ரீரங்கத்தில் 2004 ஆம் ஆண்டு, ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில், மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு 2 ஆண்டு சிறைதண்டனையும், மேலாளர் சடகோபன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டும், முருகேசன் என்பவருக்கு 6 மாதம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 4 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு 3 மாதம், மேலாளர் சடகோபனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். முருகேசனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 6 மாத கடுங்காவல் தண்டனையை உறுதி செய்ததுடன், தர்மராஜை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். மண்டப உரிமையாளர் ராமசாமி சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதை 6 வாரத்தில் கீழமை நீதிமன்றம் மூலம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com