Sriperumbudur| North Indian| காப்பாற்ற சென்ற வடமாநிலத்தவர் குடலை சரித்து கொலை
#sriperumbudurlatestnews #northindianissue
நண்பரை காப்பாற்ற சென்றவர் கொலை - ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிர்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் ஜங்ஷனில், நண்பரை காப்பாற்றச் சென்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... --- பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குல்சன் குமார் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், நிதீஷ் குமாருக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டோபோ என்பவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிதீஷ் குமாரை தாக்க டோபோ தனது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேருடன் காட்டரம்பாக்கம் ஜங்ஷனில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு நிதீஷ் குமாரை தாக்கியபோது, சண்டையை தடுக்க முயன்ற குல்சன் குமாரை டோபோ கத்தியால் குத்தியுள்ளார்.. இதில் படுகாயமடைந்த குல்சன் குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து டோபோ, ஆகாஷ், விகாஷ் பாப்கோன் உள்ளிட்ட 5 பேரை சோமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.
