மதுபோதையில் வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கிய நபர்

x

மதுபோதையில் வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கிய நபர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் இருந்த நபர் வடமாநில இளைஞரை கொலைவெறியுடன் தாக்கும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோவில் ஒன்றில் ஜவுளி விற்பனை செய்யும் வடமாநில இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த கதிர் என்பவர் வடமாநில இளைஞரை இங்கு ஏன் அமர்ந்துள்ளாய் எனக்கேட்டு, சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்