Sri Varadharaja Perumal Temple | Kanchipuram | வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வல்லுநர் குழு ஆய்வு
Sri Varadharaja Perumal Temple | Kanchipuram | வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வல்லுநர் குழு ஆய்வு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், மாநில அளவிலான சிறப்பு வல்லுநர் குழு ஆய்வு செய்தது. ஆகம விதிகள் மீறப்படுகின்றன என்ற வழக்கின் அடிப்படையில், இந்த ஆய்வு நடைபெற்றது. வைணவ ஆகம வல்லுநர் ஒருவர் வராததால், முழுமையான ஆய்வு பின்னர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கோவில் வளாகத்தில் நடைபெறும் பணிகளை குழுவினர் பார்வையிட்டனர். ஆய்வின்போது, பக்தர்கள் மற்றும் சில அமைப்பினர் கோரிக்கை மனுக்கள் அளித்ததால், சிறிய பரபரப்பும் ஏற்பட்டது.
