மதுரையில் சுற்றித்திரியும் புள்ளிமான் - இரவில் துள்ளி விளையாடும் CUTE வீடியோ

x

மதுரையில் சுற்றித்திரியும் புள்ளிமான் - மீட்க கோரிக்கை

மதுரை எல்லீஸ் நகரில் இரவு நேரத்தில் தனிமையாக சுற்றி திரியும் புள்ளிமானின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வழி தவறி மாநகர் பகுதிக்கு வந்த நிலையில் இரவில் வழி தெரியாமல் சாலையில் சுற்றித்திரிந்து பயத்தில் ஓடுகிறது. சாலையில் தனிமையாக சுற்றி திரியும் மானை, தெரு நாய்கள் கடிக்கும் சூழல் உள்ளதால் வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மானை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்