இந்தோ திபெத் எல்லையில் சிறப்பு யோகா நிகழ்ச்சி அசத்தலான ட்ரோன் காட்சி
இந்தோ தீபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சர்வதேச யோகா தினம். 1400 பேர் லட்சினை வடிவில் அமர்ந்து யோகா பயிற்சி செய்யும் கழுகு பார்வை காட்சி.
சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகே இந்தோ திபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1400 பார் பங்கேற்று இந்தோ தீபெத் பாதுகாப்பு படையின் இலட்சினை வடிவில் அமர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
படமாத்தூரை அடுத்துள்ள இலுப்பகுடியில் இந்தோ தீபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையமானது கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், மலை ஏறுதல், நீச்சல் பயிற்சி, யோகா தற்காப்பு, உடல் திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட 44 வார கால பயிற்சி வழங்கப்பட்டு இந்திய எல்கையில் பணிக்கு அமர்த்தப்படுவர். இந்நிலையில் அந்த பயிற்சி மையத்தில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி ஜஸ்டின் ராபர்ட் தலைமையில் சுமார் 1400 பேர் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதுடன் இந்தோ தீபெத் எல்கை படையின் இலட்சினை வடிவில் அமர்ந்து யோகா பயிற்சியினை மேற்கொண்டனர். அதன் கழுகு பார்வை காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
