துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இன்று இரவு குருபகவான் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி குருஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று முதல் கால சிறப்பு யாகம் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.