SpecialTrain |தீபாவளிக்கு 3 சிறப்பு ரயில்கள்-இன்னைக்கே புக் பண்ணிருங்க..எந்தெந்த ரூட்டில் தெரியுமா?
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து கோவைக்கும், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும் கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.முன்னதாக அறிவிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் முன்பதிவு முடிந்து விட்டது.இந்நிலையில், 17,18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து கோவை போத்தனுருக்கும், மறு மார்க்கத்தில் 18, 21 ஆகிய தேதிகளில் சென்னைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதே போல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே 16, 18 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கத்தில் செங்கல்பட்டு வரை 17ம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.
Next Story
