அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதலிடம் பெற்றதும், திருமணக் கோலத்தில் கந்தபெருமான் காட்சி தரும் திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்

முருகப் பெருமானின் பெருமைகளை விளக்கும் தலங்களில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறது திருப்பரங்குன்றம். மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் இருக்கிறது இந்த முதல் படை வீடு.

இங்கு சுப்ரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். சூரபத்மனை வதம் செய்த பிறகு திருப்பரங்குன்றத்திற்கு வந்த முருகனுக்கு தன் மகள் தெய்வானையை மணமுடித்து கொடுக்க விரும்புகிறார் இந்திரன். அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்த தலம் இது என்கிறது கோயில் வரலாறு.

X

Thanthi TV
www.thanthitv.com