சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகள் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட சமீம், தவுபீக் ஆகியோர் இன்று குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகள் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
Published on

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சமீம், தவுபீக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கர்நாடக போலீசார் கன்னியாகுமரி மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அதிகாலை உடுப்பியிலிருந்து காவல் துறையின் 2 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 20 போலீசார் அடங்கிய குழு சமீம் மற்றும் தவுபீக் ஆகியோருடன் புறப்பட்டுள்ளனர். நாளை காலை குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com