Tiruvannamalai | Temple News | ஆரணி கைலாசநாதர் ஆலயத்தில் கெஜலட்சுமி அலங்காரம்
ஆரணி கைலாசநாதர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு 6 ஆம் நாளில் கெஜலட்சுமி ரூபத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பழமைவாய்ந்த அறம்வளம் நாயகி, கைலாசநாதர் ஆலயம் உள்ளது. இங்கு நவராத்திரி 6ஆம் நாள் விழாவை முன்னிட்டு கெஜலட்சுமி அலங்காரம் நடைபெற்றது. இதில் 60 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க நகையால் அலங்காரம் செய்யப்பட்டு கெஜலட்சுமி ரூபத்தில் காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
