விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்பெஷல் அறிவிப்பு

x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 380 கணபதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க, கணபதி சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 11 முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

பண்டிகை நெருங்கும்போது சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டில் 305 கணபதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 358-ஆக அதிகரித்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 380 கணபதி சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

மத்திய ரயில்வே அதிகபட்சமாக 296 ரயில் சேவைகளை இயக்க உள்ளது. மேற்கு ரயில்வே 56 சிறப்பு ரயில்களையும், கொங்கன் ரயில்வே 6 சிறப்பு ரயில்களையும், தென்மேற்கு ரயில்வே 22 சிறப்பு ரயில்களையும் இயக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் விரிவான அட்டவணை IRCTC வலைத்தளம், RailOne செயலி மற்றும் கணினிமயமாக்கப்பட்ட BRS ஆகியவற்றில் கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்