Tiruvannamalai | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
#tiruvannamalai #annamalaiyartemple #thanthitv
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் பாமா-ருக்மணி சமேத உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வண்ண மலர் மாலைகள் மற்றும் துளசி மாலை அணிவிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தி மற்றும் நட்சத்திர ஆரத்தி நடைபெற்றது.புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூத நாராயண பெருமாளை தரிசனம் செய்தனர்.
