16-வது சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்துரை

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றனர்.
16-வது சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்துரை
Published on

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்துரை

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றனர். சட்டப்பேரவையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார். இதை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அப்பாவுவை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.தொடர்ந்து, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி பெயர் அறிவிக்கப்பட்டு, அவர் பதவி ஏற்றார். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் சபாநாயகரை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை நாட்கள் முழுமையாக நடைபெற ஒத்துழைப்போம் என்றார். பேரவை தலைவர், ஆசிரியரை போல் நடுநிலையாக செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com