Speaker | Chennai News | ஆள் மாறி சரமாரி வெட்டு - சென்னையை சூழ்ந்த பயங்கர அச்சம்
சென்னை கே.கே.நகரில் ஸ்பீக்கர் திருட்டை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த கும்பல், ஆட்டோ ஓட்டுநரின் மாமன் மகனை அரிவாளால் தலையில் வெட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்த தினேஷ், கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆட்டோ ஓட்டுநர் அப்பு அளித்த புகார் தொடர்பாக, எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்செயல்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
Next Story
