

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கோட்டைகரை மாரியம்மன் கோயில் அருகே கூட்டம் நடைபெற இருந்த நிலையில், திராவிடர் கழகத்தினர் இந்து கடவுள் பற்றி தவறாக பேசுவார்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, இந்து கடவுள்களை பற்றி இழிவாக பேசமாட்டோம் என உறுதி அளித்ததை அடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.