

கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இதையடுத்து அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்றிரவே அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழியெங்கிலும் மக்கள் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.