"250 ஏக்கரில் விண்வெளி பூங்கா" மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்

x

"250 ஏக்கரில் விண்வெளி பூங்கா" மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்

தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதிக்கான புது மையம் 5.55 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றார். நெல்லையில் உணவு பதப்படுத்தும் மண்டலம் மற்றும் கப்பல் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான தளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்