S.P. Adithanar | Nellai News |தர்பூசணியில் சிவந்தி ஆதித்தனார், சி.பா.ஆதித்தனார் படம் வரைந்து அசத்தல்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களது உருவத்தை தர்பூசணி பழத்தில் வரைந்து சமையல் கலைஞர் செல்வகுமார் அசத்தி உள்ளார். பா.சிவந்தி ஆதித்தனாரின் 90 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதேபோல், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 121வது பிறந்தநாள் விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில், தென்காசி ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சமையல் கலைஞர் செல்வகுமார், தர்பூசணி பழத்தில் அவர்களின் படத்தை தத்ரூபமாக வரைந்து உள்ளார்.
Next Story
