தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் | விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது நேர்ந்த அதிர்ச்சி

x

தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே தாயை துப்பாக்கியால் சுட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது அவரது குழந்தைகளுக்கு ஏர்கன் ஒன்றை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் ஏர்கன்னால் சுட்ட போது ரப்பர் குண்டு வெளியேறி அவரது தாய் பத்மாவதி கால் மற்றும் தொடை பகுதியில் பாய்ந்துள்ளது. இதில் அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் காவலர்கள் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்