அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மகன் பிரவீண், இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். அங்கு அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையே, சொத்து பிரச்சினை காரணமாக ஒரு மாதம் முன்பு பிரவீண் தமிழகம் வந்துள்ளார். பிரவீணிடம் சொத்து பிரச்சினை குறித்து பேசுவதற்காக, தாய் ரத்தினம் சென்னையிலுள்ள பிரவீணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில், பிரவீண், தனது தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பியோடிய பிரவீணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.