மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற தாய்

x

திருவள்ளூர் அடுத்த மப்பேடு அடுத்த நமச்சிவாயபுரம் பகுதியில் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக தினமும் மதுபோதையில் தாயிடம் பணம் கேட்டு மகன் கிருஷ்ணமூர்த்தி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தாய் ஜெயந்தி, மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் தாய் ஜெயந்தியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்