தந்தையின் தலையில் கல்லை போட்டு மகன் கொலை

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 61 வயது முதியவர் விஸ்வநாதன்.

இவருக்கு ராஜசேகர் என்ற ஒரு மகன் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

விஸ்வநாதன் தனது மகன் ராஜசேகருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அன்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை எழுதி கொடுத்துள்ளார்

வீட்டை எழுதி வாங்கிக் கொண்ட மகன் ராஜசேகர் தந்தையை முறையாக கவனத்து கொள்ளவில்லை இதனால் அவர் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரை அணுகி அந்த வீட்டை மீண்டும் தனது பேருக்கு மாற்ற மனு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வீட்டை எழுதி கேட்கிறாயா என்ற ஆத்திரத்தில் மகன் ராஜசேகர் தந்தை விஸ்வநாதனை ஒன்னக்கரசம்பாளையத்தில் வைத்து தகராறு செய்து அவரை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து விஸ்வநாதன் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் மேலும் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பதபதப்பை ஏற்படுத்தி உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com