குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தாயை கொடூரமாக வெட்டி கொலை செய்த மகன்

மதுரை அருகே குடிக்க பணம் தராததால் தாயை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தாயை கொடூரமாக வெட்டி கொலை செய்த மகன்
Published on
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் வசித்து வருபவர் கந்தையா. இவரது மனைவி பூபதி. இவர்களது மகன் தங்கவேலு குடிபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிப்பதற்கு பணம் கேட்டு தன் தாயை தங்கவேலு வற்புறுத்தி வந்துள்ளார். இதில் பெற்றோருக்கும் தங்கவேலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் அங்கிருந்த கோடாரியை எடுத்து தாயை வெட்டியுள்ளார் . . இதில் படுகாயம் அடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற கந்தையா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தங்கவேலுவை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com