தீக்குளித்த தாயை காப்பாற்ற முயன்ற மகன் உடல் கருகி பலி
கும்மிடிப்பூண்டி அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாயை காப்பாற்ற முயன்ற மகன் உடல் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
கும்மிடிப்பூண்டி அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாயை காப்பாற்ற முயன்ற மகன் உடல் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே உள்ள குருவராஜகண்டிகையை சேர்ந்தவர் நூரி. இவர் கடன் தொல்லையால் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதைப் பார்த்த அவரது மகன் அமானுல்லா, தாயைக் காப்பாற்ற முயன்ற போது தீயில் கருகி உயிரிழந்தார். நூரி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.