சித்தியை கொடூரமாக கொன்ற மகன் - அதிர்ச்சி காரணம்
காஞ்சிபுரம் அருகே ஏரிக்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறில் சித்தியை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சுப்பிரமணி மற்றும் துளசிராமன் ஆகிய இருவருக்கும் ஏரிக்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் துளசிராமன் மனைவி சுமதிக்கும், சுப்ரமணியனின் மகனான துரைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் துரை வீட்டிலிருந்த கத்தியால் சுமதியை சரமாரியாக வெட்டி சாய்த்து அங்கிருந்து தப்பி சென்று உள்ளார். சுமதியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏரி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட வாய்த்தகராறு கொலையாக முடிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
