Son Birthday | மகனின் பிறந்தநாளுக்கு ஊருக்கு வந்த தந்தை கொடூர மரணம் - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி
Son Birthday | மகனின் பிறந்தநாளுக்கு ஊருக்கு வந்த தந்தை கொடூர மரணம் - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி
ராணிப்பேட்டையில் தனது மகன் பிறந்த நாளுக்காக ஊருக்கு வந்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. காஞ்சிபுரத்தில் தங்கி வேலை பார்த்து வந்த இளங்கோ தந்து மகன் பிறந்தநாளை முன்னிட்டு ராணிப்பேட்டைக்கு வந்துள்ளார், இந்த நிலையில் இளங்கோவின் உறவினர் தனுஷ் என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை இளங்கோ தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் இளங்கோவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
