2 வயதிலேயே பெல்ஜியம் தம்பதிக்கு விற்பனை - "பெற்றோரை ஒரு முறையாவது.."

மதுரையை சேர்ந்த இளம் பெண், 2 வயதில் பெல்ஜியம் தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக தமிழகத்தில் பெற்றோரை தேடி வருகிறார்.

சென்னை அண்ணா நகரில் இயங்கிய மலேசியன் சோசியல் சர்வீஸ் என்ற காப்பகம் மூலமாக பெல்ஜியத்தை சேர்ந்த பிலிப் - மேரி தம்பதிக்கு 2 வயதில், கடந்த 1994ல் விற்கப்பட்டவர் அருணா. பெல்ஜியத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் ஆவணங்களின் அடிப்படையில் தனது தாயார் பெயர் சகுந்தலா என்பதையும், மதுரை பாளையம், கோனார் தெருவை சேர்ந்தவர் என்பதையும் கண்டறிந்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் அஞ்சலி பவார் உதவியோடு இந்தியாவிற்கு வந்து பெற்றோரை தேடி வரும் நிலையில், வளர்ப்பு தாய் இறந்துவிட்டதாகவும், தந்தைக்கும் வயதான நிலையில் தன்னை ஈன்றெடுத்த பெற்றோரை ஒரு முறையாவது சந்தித்து விட வேண்டும் என்ற கண்ணீருடன் தெரிவித்துள்ளார். .

X

Thanthi TV
www.thanthitv.com