

சூரிய கிரகணத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடை இன்று காலை மூடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் உற்சவம் நடைபெறும் இந்த கோயிலில் சூரியன், சந்திரன் கிரகணங்களால் தோஷம் கிடையாது என்று வரதராஜ பெருமாள் கோயிலை சேர்ந்த கண்ணன் பட்டாச்சாரியார் தெரிவித்துளார்.