கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மாங்காய் மண்டியில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. இதனால் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாத அவலநிலை ஏற்பட்டது. வழி நெடுக்க வாகனங்கள் இருந்ததால் போலீசார் வாகன நெரிசலை சரிசெய்ய முடியாமல் திணறினர். பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.