தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் மீது தாக்குதல்

தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூச்சிவிளாகம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர், சமூக ஆர்வலராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது 45-வது வார்டு பகுதியில் தீபாவளி வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

அப்போது அங்கு வந்த நாகர்கோவில் பாஜக மண்டல தலைவரும், மாமன்ற உறுப்பினருமான சதீஷ், போஸ்டர்களைக் கிழித்ததுடன் திருப்பதியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த திருப்பதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#kaniyakumari #Diwali #poster #attack #thanthitv

X