எகிறிய விலை - சந்தையில்ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

x

Theni Goat Sale | எகிறிய விலை - சந்தையில்ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை ஆட்டுசந்தை நடைபெறும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆடி மாதம் கோவில்களில் படைப்பதற்காக கிடாய் ஆடுகளையும் , இறைச்சி ஆடுகளையும் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு ஆர்வமாக வாங்கினர். 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.6 ஆயிரம் வரையிலும் 10 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு ரூ.8 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்