"இந்த ஒருத்தரால அவ்வளவு பிரச்சனை.." - ஜி.பி.முத்துவுக்கு எதிராக கொந்தளித்த ஊர் மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் யூடியூபர் ஜி.பி.முத்துவின் வீட்டை ஊர்மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில் நிலம் மற்றும் தெருவை ஜி.பி.முத்து ஆக்கிரமித்துள்ளதாகவும் கோவில் நிலத்தை தனிநபருக்காக விட்டுக்கொடுக்க முடியாது எனவும் ஊர்மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
ஜி.பி.முத்துவின் செயலால் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடியவில்லை, விழா எடுக்க முடியவில்லை எனவும் ஊர்மக்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, போலி பத்திரம் தயாரித்து, 2 நபர்கள் ஊர் சொத்தை அபகரிப்பதாகவும் இதை தட்டிக்கேட்டதால் தன் மீது பழி சுமத்தப்படுவதாகவும் யூடியூபர் ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.
Next Story
