Snapchat Video Call-ல் பேசிய இளம்பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி
சென்னை எர்ணாவூரில் ஸ்னாப்சாட் மூலம் பழகிய கல்லூரி மாணவியை, ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் என்பவருடன் கல்லூரி மாணவி ஒருவர், ஸ்னாப்சாட் மூலம் நட்பாக வீடியோ காலில் பேசி வந்துள்ளார். அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து ஆபாசமாக சித்தரித்த தமீம், இளம்பெண்ணை தனது இச்சைக்கு இணங்க மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் அறிவுறுத்திய படி தமீமிடம் இளம்பெண் பேசி அவரது இடத்தை கண்டறிந்த நிலையில், இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Next Story