Snake | Mamallapuram | மாமல்லபுரத்தில் பரபரப்பை கிளப்பிய சாரைப்பாம்புகள்

Snake | Mamallapuram | மாமல்லபுரத்தில் பரபரப்பை கிளப்பிய சாரைப்பாம்புகள்

மாமல்லபுரம் கணேச ரதம் அருகில், இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நீண்ட நேரம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், இரு பாம்புகளையும் பத்திரமாக பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டனர். இந்தப் பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com