சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. பாம்பை கண்டு பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மலைப்பாம்பு குட்டி மீட்கப்பட்டது.