9 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் கல்லார் ரயில்வே கேட் அருகில் 9 அடி நீள மலைப்பாம்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் ஒயிட் பாபுவிற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒயிட் பாபு அப்பகுதியில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த 9 அடி நீள மலைப்பாம்பை லாவமாக பிடித்து சாக்கு பையில் கட்டி மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
