snake bite women | கையில் கடித்த பாம்பை பையில் எடுத்து வந்த பெண் - ஷாக்கான மக்கள்

x

புதுக்கோட்டை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெண் ஒருவரை பாம்பு கடித்த நிலையில், அவர் பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கும்மங்குளம் தோப்புக்கொல்லையைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி ஜெயலட்சுமி என்பவரை அவரது வீட்டு வாசலில் வைத்து பாம்பு ஒன்று கையில் கடித்துள்ளது. இந்த நிலையில் , அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் கடித்த கட்டுவிரியன் பாம்பை அடித்து பையில் போட்டு, ஜெயலட்சுமியை சிகிச்சைக்காக ஆலங்குடி அரச மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்