வெளியே வந்த புகை..அலார்ட்டான நோயாளிகள் ஹாஸ்பிடலில் அதிர்ச்சி
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எச்டியூ எனப்படும் சிறப்பு பிரிவில் இருந்து புகை வெளியே வருவதை பார்த்த பக்கத்து வார்டு நோயாளிகள் உடனே வெளியேறினார்கள். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நெருப்பை அணைத்து புகை மூட்டத்தை கட்டுப்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்ட அறையில் நோயாளிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வென்டிலேட்டர் அணைக்கப்படாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததே விபத்திற்கான காரணம் என மருத்துவத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
