விரைவில் வருகிறது வாகனங்களுக்கான "ஸ்மார்ட் கார்டு"

தமிழகத்தில் விரைவில், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் வருகிறது வாகனங்களுக்கான "ஸ்மார்ட் கார்டு"
Published on
தமிழகத்தில் விரைவில், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டில், வாகன உரிம‌ம், ஆர்.சி.புத்தகம் , இன்சூரன்ஸ் என அனைத்து தகவல்களும் இடம் பெறுகின்றன. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் அளவில் இந்த ஸ்மார்ட் கார்டு வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com