வழுக்கு மரம் ஏறும் போட்டி - தவறி விழுந்த இளைஞர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் அருகே உள்ள மேல்பாரதி பகுதியில் நேற்று அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் 60 அடி உயரம் உள்ள வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் அதே பகுதியை குருமூர்த்தி என்ற இளைஞர் மரம் ஏறி போட்டியில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சில நிமிடங்கள் 60 அடி உயரத்தில் இருந்து இளைஞர் கால் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த இளைஞரை உடனடியாக மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இளைஞர் கீழே விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Next Story
