திருமுல்லைவாயிலில் சினிமா ஊழியரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கைது

திருமுல்லைவாயிலில் சினிமா ஊழியரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கைது

ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்த 31 வயது சஞ்சய், சினிமாத் துறையில் அலங்காரப் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் நண்பருடன் காரில் திருமுல்லைவாயில் சி.டி.எச். சாலை அருகே சென்றபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் சாலையை மறித்து நின்ற இளைஞர்களிடம் வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சஞ்சய், தென்றல் நகர் பிரதான சாலைக்குச் சென்ற நிலையில், இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளது.

இதில் தலை மற்றும் நெற்றியில் பலத்த காயமடைந்த சஞ்சய், அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் இதுதொடர்பான, சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிக், பாலா, பாலாஜி, கணேஷ், ராம், விக்னேஷ் ஆகிய 6 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com