எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு உதவியவரிடம் விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு குற்றவாளிகள் சமீம், தவுபீக் ஆகியோருக்கு உதவிய செய்யது அலி என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு உதவியவரிடம் விசாரணை
Published on

சமீம், தவுபீக் ஆகியோருக்கு தங்குவதற்கு வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்தது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை புரிந்த செய்யது அலி என்பவர், திருவனந்தபுரத்தில் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் பல்வேறு ரகசிய இடங்களில் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது நாகர்காவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தமிழக போலீசின் சிறப்பு புலானாய்வு பிரிவு, கியூ பிரிவு உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், நீண்ட காலமாக பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருந்ததாகவும், அதன் அடிப்படையில் சமீம், தவுபீக் ஆகியோருக்கு உதவி வந்ததாகவும் செய்யது அலி தெரிவித்ததாக, போலீசார் கூறினர். இதையடுத்து, கேரளாவில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com