சிவசங்கர் பாபாவின் பாலியல் விவகாரம்! ட்விஸ்ட் வைத்த முன்னாள் மாணவி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தபோது, அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் மாணவி ஒருவர், கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், புகார் அளித்த மாணவி ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், புகாரில் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முன்னாள் மாணவியை, சிபிசிஐடி காவல்துறையினர், காணொலி காட்சி மூலம் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த பெண், சிவசங்கர் பாபா மிகவும் செல்வாக்கானவர் என்பதால், பாதுகாப்பு கருதி இந்தியா வந்து நேரில் ஆஜராக இயலாது என்றும், காணொலி வாயிலாக எப்போது வேண்டுமானாலும் வாக்குமூலம் கொடுக்க தயாராக இருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டு கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வாக்குமூலத்தை பெறுவதற்கான தேதியை செங்கல்பட்டு நீதிமன்றம் முடிவு செய்து, காணொலி வாயிலாக முன்னாள் மாணவியிடம் வாக்குமூலம் பெற சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com