சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - தந்தி குழும ஊழியர்கள் மரியாதை
தமிழகத்தில் உள்ள தந்தி குழும அலுவலங்களில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சேலத்தில் உள்ள தந்தி குழும அலுவலகங்களிலும், திண்டுக்கல் மற்றும் நெல்லையில் உள்ள தினத்தந்தி பதிப்பு அலுவலகத்திலும் ஊழியர்கள் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதேபோல், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில், மேலாளர் மற்றும் முதல்வர்கள் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story
