Sivakasi Youngster Murder| நடுத்தெருவில் செதில் செதிலாக வெட்டி சரிக்கப்பட்ட சிவகாசி இளைஞர்

நடுத்தெருவில் செதில் செதிலாக வெட்டி சரிக்கப்பட்ட சிவகாசி இளைஞர்

நடுத்தெருவில் செதில் செதிலாக வெட்டி சரிக்கப்பட்ட சிவகாசி இளைஞர் - ஆத்திரத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு #sivakasiyoungstermurder #sivakasimurder சிவகாசியில் இளைஞர் வெட்டிப் படுகொலை - 6 பேர் கைது விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மாரிச்செல்வம், ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மாரிச்சாமிக்கு பக்கத்து ஊரை சேர்ந்த சில இளைஞர்களுடன் ஏற்கனவே வாய்த்தகராறு இருந்துவந்துள்ளது.. இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாரிச்செல்வத்தை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, கொங்கலாபுரம் ஜக்கம்மாள் காலனிக்குள் வைத்து அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியோடியதாக கூறப்படுகிறது... தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்க முயன்றபோது, ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து, சிவகாசி - வெம்பக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியையும் சில மர்ம நபர்கள் உடைத்ததால் பதற்றம் நிலவியது. தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மதிசங்கர், வெங்கடேஷ், மாதவன் உட்பட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராமில் கத்தி, அரிவாளுடன் வீடியோ பதிவிட்டு "யார் பெரிய தாதா?" என ஹீரோயிசம் காட்டிய சினிமா பாணி கோஷ்டி மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.. இருவேறு சமூகத்தினர் என்பதால் சிவகாசி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com