Sivakasi | Robbery | முகமூடி திருடனை மூதாட்டி விரட்டி அடித்த சம்பவம்.. கொள்ளையனை தூக்கிய போலீசார்..
சிவகாசியில் முகமூடி அணிந்து, மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செயின் பறிக்க முயன்ற முகமூடி திருடனை, மூதாட்டி விரட்டி அடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர். பால் வியாபாரியான இவர், ஓராண்டுக்கு முன்னர் மூதாட்டியின் வீட்டிற்கு பால் விநியோகித்துள்ளார். இந்நிலையில், கடன் தொல்லை காரணமாக அவர் இச்செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்
Next Story
