ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், "ஹீரோ" திரைப்படத்தை வரவேற்கும் விதமாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர், ஆதரவற்ற இல்லத்திற்கு சென்ற ரசிகர்கள், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதுடன், மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து, திரைப்படத்தை காண வரும் பொதுமக்களுக்கும் மரக்கன்று மற்றும் விதைப்பந்துகளை கொடுத்து கொண்டாடத்தில் ஈடுபட்டனர். சிவகார்த்திகேயன் ரசிகர்களின், இந்த செயல்பாடுகளை அப்பகுதிமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.